ஸ்னூக்கர் தர்பாரில் நீயா நானா? : உலக ஜாம்பவான் பங்கஜ் அத்வானிக்கு சவால்..

By 
Niya Nana in Snooker Darbar  Challenge to world legend Pankaj Advani ..

88-வது தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள், மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்து வருகிறது.

இதில், நடந்த முதல் சுற்றுப் போட்டியில் உலக சாம்பியனான பங்கஜ் அத்வானி,  கர்நாடகா வீரர் சந்தோசுக்கு எதிராக விளையாடினார்.

கடும் சவால் :

பல முறை உலக சாம்பியன் ஆன பங்கஜ் அத்வானி பல சர்வதேச தொடர்களையும், உலகின் முன்னணி ஸ்னூக்கர் போட்டியாளர்களையும் வீழ்த்தியுள்ளார். 

இதனால், தேசிய போட்டியின் தொடக்க சுற்றில் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கர்நாடகாவின் சந்தோஷ் இவருக்கு கடும் சவால் அளித்தார். இருப்பினும், முதலில் சிறிது தடுமாறிய பங்கஜ் அத்வானி பின்னர் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

பெண்கள் பிரிவு :

பெண்களுக்கான முதல் சுற்றில், இஷிகா ஷா  இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு போட்டியில், மத்தியப் பிரதேசத்தின் அமீ கமானி  தமிழகத்தின் நீனா பிரவீனை வீழ்த்தி  4-1 (49-10, 34-01, 22-45, 14-37, 37-01) என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
*

Share this story