இன்று ஒலிம்பிக் திருவிழா : முதலிடம் பெற்ற 17 வயது சிறுவன் 'தில்லு'

By 
Olympic festival today 17-year-old boy 'Thillu' wins first place

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்று இன்று காலை முதல் யுமெனோஷிமா பூங்காவில் நடைபெற்றது.

முதல் இடம் :

இதில், 17 வயதான தென் கொரியாவை சேர்ந்த கிம் ஜே தியோக்  புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த எல்லிசன் பிரடி 682 புள்ளிகளுடன் உள்ளார். 

தென் கொரியாவை சேர்ந்த ஓஹ் ஜின்க்யெக் 681 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும்,கிம் வோஜின் 681 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும் உள்ளார்.

போராட்டம் :

இந்திய ஆண்கள் வீரர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த போராடுகிறார்கள். பிரவீன் ஜாதவ்  656 புள்ளிகளுடன் 31 வது இடத்தில்  உள்ளார்.  653 புள்ளிகளுடன் 35 வது இடத்தில் அதானு தாஸ் உள்ளார். 652 புள்ளிகளுடன்  37 வது இடத்தில் தருந்தீப் ராய் உள்ளார்.

கலப்பு பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி 663 புள்ளிகளுடனும், பிரவீன் ஜாதவ் 656 புள்ளிகளுடனும், மொத்தம் 1319 புள்ளிகளுடன் 29 அணிகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.

பிரவீன் ஜாதவ்: 656 புள்ளிகள் (தரவரிசை - 31)

அதானு தாஸ்: 653 புள்ளிகள் (தரவரிசை - 35)

தருந்தீப் ராய்: 652 புள்ளிகள் (தரவரிசை - 37)

அணி: 1961 புள்ளிகள்  (தரவரிசை - 9)

கலப்பு பிரிவு தீபிகா, பிரவீன்: 1319 புள்ளிகள் (தரவரிசை - 9)
*

Share this story