ஒலிம்பிக் டுடே : பதக்கப்பட்டியலில், அமெரிக்கா மீண்டும் முதலிடம்..இந்தியா.?

Olympic Today In the medal table, the United States again tops the list .. India.

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில், ஆரம்பித்த முதல் நாள்  சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து, தொடர்ந்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்தது. 

நேற்று ஜப்பான்  பதக்கப்பட்டியலில் முன்னிலையில் இருந்தது. இன்று காலை அமெரிக்க பதக்கப்பட்டியலில்  மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.

அமெரிக்கா தங்கம் 13, வெள்ளி,12 வெண்கலம் 10 என மொத்தம் 35 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், சீனா தங்கம் 13, வெள்ளி 6, வெண்கலம் 9 என மொத்தம் 28 பதக்கங்களுடன் 2 வது இடத்திலும்,  ஜப்பான் தங்கம் 13, வெள்ளி 4, வெண்கலம் 5 என மொத்தம்  22 பதக்கங்களுடன் 3 வது இடத்திலும் உள்ளன.

தொடர்ந்து ரஷ்யா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன

இந்தியா 45-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Share this story