ஒலிம்பிக் டுடே : வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி, இப்படி வீழலாமா?

By 
Olympic Today Indian men's archery team, can it fall like this

ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவுப் போட்டி இன்று நடந்தது. அதானுதாஸ், ரவின் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோர் கொண்ட இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானை எதிர்கொண்டது.

டோக்கியோ ஒலிம்பிக்கில், வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் அதானுதாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய், தீபிகா குமாரி ஆகியோர் பங்கேற்றனர்.

கலப்பு அணிகள் பிரிவில் பிரவின் ஜாதவ்- தீபிகா குமாரி ஜோடி காலிறுதியில் தென் கொரியாவிடம் 2-6 என்ற கணக்கில் தோற்றிருந்தது.

காலிறுதிக்கு முன்னேற்றம் :

ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவுப் போட்டி இன்று நடந்தது. அதானுதாஸ், ரவின் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோர் கொண்ட இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானை எதிர்கொண்டது.

இதில், இந்தியா 6-2 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில், இந்தியா பலம் வாய்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. 

முடியவில்லை :

தென்கொரிய வீரர்களுக்கு இணையாக, இந்திய வீரர்களால் அம்புகளை தொடுக்க முடியவில்லை. 

இதனால், முதல் செட்டை 54-59, இரண்டாவது செட்டை 57-59, மூன்றாவது செட்டை 54-56 என இழந்து செட் பாயிண்டில் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது.

Share this story