இந்தியா சார்பில், ஒலிம்பிக்கில் பங்கேற்பதே எனது இலக்கு : தங்கம் வென்ற காஷ்மீர் சிறுமி

On behalf of India, my goal is to participate in the Olympics Gold-winning Kashmir girl

'இந்தியா சார்பில், ஒலிம்பிக்கில் பங்கேற்பதே எனது இலக்கு' என உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற காஷ்மீர் சிறுமி கூறியுள்ளார்.

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் 14 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்க கூடிய உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.  

இதில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த தஜாமுல் இஸ்லாம் என்ற 13 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமி கலந்து கொண்டார்.

அவர், இறுதி போட்டியில் அர்ஜெண்டினா வீராங்கனை லலீனாவுடன் விளையாடி, தங்க பதக்கம் வென்று சாம்பியன்ஷிப் பட்டமும் வென்றுள்ளார்.  

இந்தியா சார்பில், இந்த போட்டியில் பங்கேற்ற முதல் காஷ்மீரி என்ற பெருமையை தஜாமுல் பெற்றுள்ளார்.

இதுபற்றி தஜாமுல் கூறும்போது, 'அரை இறுதியில் பிரான்சுடனும், அதற்கு முந்தின இரு போட்டிகளில் எகிப்துடனும் மோத வேண்டியிருந்தது.   

உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், அர்ஜெண்டினா வீராங்கனையை எதிர்கொண்டேன்.

இந்த வெற்றியால், 2 முறை உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளேன்.  என்னுடைய மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.  

போட்டியில் 112 நாடுகள் பங்கேற்றன.  சிறுமிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்.  அவர்களால் எதனையும் செய்ய முடியும்.  

இந்தியா சார்பில், ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது இலக்கு' என்றார்.

Share this story