அந்த அணியால் மட்டுமே, இங்கிலாந்து அணி வேகத்தை தடுக்க முடியும் : முன்னாள் கேப்டன் சொல்கிறார்

By 
Only that team can stop the pace of the England team says the former captain


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும், வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளன.

விக்கெட் :

குரூப் 1 பிரிவில் உள்ள இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீசை 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வங்காளதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

குரூப் 2 பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி இந்தியா (10 விக்கெட்), நியூசிலாந்து (5 விக்கெட்), ஆப்கானிஸ்தான் (5 விக்கெட்) ஆகியவற்றை தோற்கடித்தது.

பாகிஸ்தான் அணி :

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் வேகத்தை பாகிஸ்தானால் மட்டுமே தடுக்க முடியும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :

இங்கிலாந்து அணிதான் சிறந்த அணி. எதிராளிகளை அபாரமாக வீழ்த்த கூடிய அணியாக இருக்கிறது. இங்கிலாந்து அணியின் வெற்றி நடையை தடுப்பது யார்?

தற்போது உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியால் மட்டுமே இங்கிலாந்தின் வேகத்தை தடுக்க முடியும்' என்றார்.

Share this story