எங்களோட இலக்கு 2 அணிகள் தான்: பாகிஸ்தான் வீரர் சல்மான்..

 

By 
salman

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி தங்களது முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால், உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் அணி வெற்றிகரமாக தொடங்க முடியும். அதற்காக பாகிஸ்தான் வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் அணி முதல்முறையாக இந்தியா வந்துள்ளது. அந்த அணியின் முகமது நவாஸ் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடியவர். அதேபோல் ஆகா சல்மான் சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக இந்தியா வந்திருக்கிறார். மீதமுள்ள அத்தனை வீரர்களும் முதல்முறையாக இந்தியா வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து அனுபவ வீரர் சல்மான் பேசுகையில்,

கடந்த முறை நான் இந்தியா வந்தபோது இளம் வீரராக இருந்தேன். இந்தியாவைப் பற்றியும், இந்தியாவில் இருக்கும் உணர்வு எப்படி இருக்கும் என்பதையும் அறிய விரும்பினேன். இப்போதும் இந்திய மக்கள் என் மீது பொழிந்த அன்பை எளிதில் மறக்க முடியாது. இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சாரம் மற்றும் மொழியும் ஒன்று தான். அதனால் இப்போது மீண்டும் இந்தியா வரும் போது மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்று நன்றாக தெரியும்.

அதேபோல் அன்பை காட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை எங்களின் கேப்டன் பாபர் அசாம் தெளிவாக உள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெல்வதை விடவும், உலகக்கோப்பையை வெல்வதே எங்களின் இலக்கு. இந்தியாவை வென்று, கோப்பையை பறிகொடுத்தாலும் எங்களின் இலக்கு தோல்வியில் தான் முடியும். எந்த அணியையும் எளிதாக வீழ்த்த முடியாது. உலகக்கோப்பை தொடரில் அனைத்து அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருப்பார்கள்.

உலகக்கோப்பைக்கு 40,000 இலவச டிக்கெட்.. டீ, ஸ்நாக்ஸும் உண்டு.. அவமானத்தை மறைக்க பிசிசிஐ கடும் முயற்சி அதனால் சிறந்த அணியை வீழ்த்த வேண்டுமென்றால் நாங்கள் சிறந்த அணியாக இருக்க வேண்டும். அதேபோல் இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவை வீழ்த்த விரும்புகிறோம்.

இந்த உலகக்கோப்பை எங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கவும், நாங்கள் நாயகர்களாக கொண்டாடப்படுவதற்கும் மிகச்சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. மேலும், இந்திய அணியினர் மீது எப்போதும் மிகப்பெரிய மரியாதையும் நட்பும் உள்ளது. பாபர் அசாமும், விராட் கோலியுமே அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று தெரிவித்துள்ளார்.
 

Share this story