பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது : இன்று ஜனாதிபதி வழங்கினார்

Padma Bhushan Award for PV Sindhu Presented by the President today

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

மூன்று பிரிவு :

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. 

அவ்வகையில், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

விளையாட்டுத் துறையில், சிறந்த பங்களிப்புக்காக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 

சுஷ்மா சுவராஜ் :

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அவரது மரணத்திற்கு பிறகு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ் பெற்றுக்கொண்டார். 

7 பேருக்கு பத்ம விபூஷன், 10 பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் என இந்த ஆண்டு மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. 
*

Share this story