பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஒற்றுமையே இல்லை - பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் பரபரப்பு பேச்சு..

By 
papa3

பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையே இல்லை” என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விமர்சித்துள்ளார்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் டி20 அணி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர் விமர்சனங்களால் பாபர் அஸம் உள்ளிட்ட சில வீரர்கள் பாகிஸ்தான் திரும்பாமல் லண்டன் சென்றுள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் அந்த நாட்டு வீரர்களை கடுமையாக சாடியுள்ளார். “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையே இல்லை” என்றும் கேரி கிர்ஸ்டன் விமர்சித்துள்ளார்.

“பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. வீரர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அது ஒரு அணியே அல்ல. வீரர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை; எல்லோரும் பிரிந்துள்ளனர். நான் பல அணிகளுடன் வேலை செய்துள்ளேன்.

எனது நீண்ட கால பயிற்சியாளர் வாழ்க்கையில், நான் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை பார்த்ததில்லை. உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​​​திறன் மட்டத்தில் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கியிருக்கிறது” என்று கேரி கிர்ஸ்டன் கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் இத்தகைய குற்றச்சாட்டை தெரிவித்திருப்பது கிரிக்கெட் உலகில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Share this story