சிஎஸ்கே, குஜராத், மும்பை அணிகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு : எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?

பரபரப்பான ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.
இதனால் குஜராத் அணி தான் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஜடேஜா 'லாங் ஆன்' திசையில் சிக்சர் அடித்து அசத்தினார்.
கடைசி பந்தில் 4 ரன் தேவை என்ற உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஜடேஜா கடைசி பந்தில் அபாரமாக பவுண்டரி அடித்து சி.எஸ்.கே. அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 10-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
இதற்கு முன்பு 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. 2 ஆண்டு தடை காரணமாக இதுவரை 14 சீசனில் மட்டுமே பங்கேற்று இருந்தது. இதில் 5 முறை சாம்பியன் என்பது அபாரமான ஒன்றாகும்.
மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை (2013, 2015, 2017, 2019, 2020) வென்று இருந்தது. அந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்தது. ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ரோஜர்பின்னி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் இதை வழங்கினார்கள். 2-வது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13 கோடி கிடைத்தது. 3-வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 4-வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு முறையாக ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.