புரோ கபடி : இதுவரை தோற்காத டெல்லியை, தமிழ் தலைவாஸ் இன்று கவிழ்க்குமா?

Pro Kabaddi Will the Tamil Talawas overthrow the hitherto undefeated Delhi today

8-வது புரோ கபடி லீக் போட்டி, பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில், 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி, தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சுடன் 40-40 என்ற புள்ளிக் கணக்கில் சமன் செய்தது. 

2-வது ஆட்டத்தில் 30-38 என்ற கணக்கில் பெங்களூர் அணியிடம் தோற்றது. 3-வது போட்டியில் மும்பையுடன் 30-30 என்ற கணக்கில் டை செய்தது.

முதல் வெற்றி :

தமிழ் தலைவாஸ் அணி 4-வது ஆட்டத்தில் நேற்று புனேரி பல்தானை எதிர்கொண்டது. இதில், தமிழ் தலைவாஸ் 36-26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது. தமிழ் தலைவாஸ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

அஜீத்பவார் 11 புள்ளியும், மஞ்சித் 8 புள்ளியும் பெற்று வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

தமிழ் தலைவாஸ் அணி 5-வது ஆட்டத்தில் தபாங் டெல்லியை இன்று எதிர்கொள்கிறது. இரவு 9.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

சவால் :

தமிழ் தலைவாஸ் அணி டெல்லியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். டெல்லி அணியை வீழ்த்துவது மிகவும் சவாலானது. ஏனென்றால், அந்த அணி இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை.

டெல்லி அணி 4 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, ஒரு டையுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. 

தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி, 2 டை, ஒரு தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டங்கள் :

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 44-30 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்தது. பாட்னா பெற்ற 3-வது வெற்றியாகும்.

அந்த அணி 16 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. பெங்கால் வாரியர்ஸ் 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 11 புள்ளியுடன் 8-வது இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் மும்பை- உ.பி. யோதா (இரவு 7.30), பெங்களூர்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.
*

Share this story