பஞ்சாப் வீழ்ச்சி-ராஜஸ்தான் எழுச்சி : ஆட்டநாயகனாக கார்த்திக் கலக்கிய கள விவரம்..
 

Fall of Punjab-Rise of Rajasthan Karthik mixed field details as captain ..

ஐபிஎல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம், துபாயில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. 

185 ரன்கள் :

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 185 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

லீவிஸ் 36 ரன், ஜெய்ஸ்வால் 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்னில் வெளியேறினார்.

மஹிபால் லோம்ரோர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் விளாசினார். 

ரியான் பராக் 4 ரன், ராகுல் டெவாட்டியா 5 ரன்னிலும் கிறிஸ் மோரிஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அரைசதம் :

பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடினர். அகர்வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். 

பஞ்சாப் அணியின் எண்ணிக்கை 120 ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் 49 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் மயங்க் அகர்வால் 67 ரன்னில் வீழ்ந்தார்.

அடுத்து இறங்கிய மார்கிராம், நிகோலஸ் பூரன் இணைந்து பொறுப்புடன் ஆடினர். பூரன் 32 ரன்னில் அவுட்டானார். 

ஆட்டநாயகன் :

இறுதியில், பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. மார்கிராம் 26 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதன்மூலம், கடைசி ஓவரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது கார்த்திக் தியாகிக்கு அளிக்கப்பட்டது.

Share this story