கிரிக்கெட் பரபரப்பு : இந்திய அணி வீரர்களுக்கு ராகுல் டிராவிட்டின் 3 அட்வைஸ்..

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பயிற்சி முகாம் தொடங்கும் போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய வீரர்களுக்கு மூன்று முக்கிய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
ராகுல் டிராவிட் வீரராக இருக்கும் காலத்தில் இருந்தே எப்போதுமே சக அணி வீரர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான். என்ன நடந்தாலும் சரி பதற்றம் அடையாமல் கூலாக விளையாடுங்கள் என்பதுதான். இதையேதான் இந்திய அணி வீரர்களுக்கும் ராகுல் டிராவிட் சொல்லிருக்கிறார். ஏனென்றால் உலகக்கோப்பை என்பது கடும் நெருக்கடியும் அழுத்தத்தையும் கொடுக்கும். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எப்போதும் போல் உங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடுங்கள் என்று டிராவிட் கூறியிருக்கிறார்.
இதேபோன்று பேட்ஸ்மேன்களுக்கு ராகுல் டிராவிட் சொன்ன ஒரு விஷயம் தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டில் கூட செதுக்கலாம். அதாவது ஒரு பந்துவீச்சாளர் உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி செய்தால் உடனே ஒரு சிங்கிள்ஸ் எடுத்துவிட்டு தப்பித்து விடுங்கள் என்பது தான். ஏனென்றால் தொடர்ந்து சிங்கிள்ஸ் எடுத்துக் கொண்டே இருந்தால் ரன்களும் வரும், பவுலர்களும் உங்களுக்கு நெருக்கடியை கொடுக்க முடியாது என்பதுதான். விராட் கோலி, கேஎல் ராகுல் இல்லையாம்.. அந்த வீரர் தான் அபாயகரமானவராம்.
பாகிஸ்தான் வீரர் ஷடாப் கான்! மூன்றாவது அறிவுரை பந்துவீச்சாளர்களுக்கு பொருந்தும் வகையில் டிராவிட் கூறியிருக்கிறார். அதில் ஒவ்வொரு பந்திற்கும் விக்கெட்டுகள் எடுக்க ஆசைப்படாதீர்கள். உங்களுக்கென ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு தொடர்ந்து அதே போல் செயல்படுங்கள். விக்கெட்டுகள் தானாக கிடைக்கும் என்பதுதான். பயிற்சியாளர் என்றால் வெற்றி பெற வேண்டும் உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என வீரர்களை போட்டு வற்புறுத்தாமல் இயல்பாக இருங்கள் என டிராவிட் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.