இன்று ராகுல்-மார்கன் மைன்ட் வாய்ஸ் : பிளே ஆஃப் சுற்றில் இருக்கப்போவது நீயா? நானா?

Rahul-Morgan Mind Voice today Are you going to be in the play-off round Nana

பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வெற்றிபெற வேண்டியுள்ளது. 

எனவே, இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கும் 45-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

கொல்கத்தா 11 ஆட்டத்தில் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும், பஞ்சாப், 11 ஆட்டத்தில் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும் உள்ளது.

பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க, எஞ்சியுள்ள அனைத்து போட்டியிலும் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டும்.

இதனால், அந்த அணிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மோத உள்ளன. 

இதனால், ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this story