ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி, கிரிக்கெட் வாரியம் கவுரவம்..
 

By 
wc22

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் தன் திறமையினாலும் ஸ்டைலினாலும் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரசிகர்கள் இவரை 'சூப்பர் ஸ்டார்' என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இவர் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படப்பிடிப்புகளை முடித்த ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா நடிகர் ரஜினிக்கு வழங்கி கவுரவித்தார்.

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Share this story