சீனியர்களுக்கு ஓய்வு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு : ஷேவாக் வலியுறுத்தல்

Retirement for seniors, opportunity for young players Sehwag insists

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 

20 ஓவர் போட்டிகள் வருகிற 17, 19 மற்றும் 21-ந் தேதியில் நடக்கிறது.

ஓய்வு :

முதல் டெஸ்ட் வருகிற 25-ந் தேதியும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 3-ந் தேதியும் தொடங்குகிறது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில், சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று, முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, அவர் கூறியதாவது :

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு, அணியை இப்போதே தயார் செய்ய வேண்டும். 

ராகுல்-இஷான் :

தற்போது உள்ள வீரர்களில் ராகுல், இஷான் கி‌ஷன், சூர்யகுமார் ஆகியோர் அடுத்த உலக கோப்பையில் ஆட வேண்டும். 

ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

எனவே, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 

உள்ளூரில் விளையாடுவதால், வீரர்களுக்கு சில அனுபவங்கள் கிடைக்கும். அதற்கு ஏற்ற வகையில் அணியை தயார் செய்ய வேண்டும்.

சில வீரர்கள் 6 மாதங்களுக்கு மேலாக குடும்பத்தை விட்டு இருக்கிறார்கள். இதனால், சில சமயம் ஓய்வு தேவைப்படுகிறது. 

எனவே, சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

Share this story