3,000 ரன் கடந்த, 3-வது வீரர் ரோகித் : ஆடுகள விவரம்..

Rohit, the 3rd player to cross 3,000 runs field details ..

டி20 உலக கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது. 

இந்திய வீரர்கள் :

இந்தியா சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
அடுத்து ஆடிய இந்தியா கே.எல். ராகுல், ரோகித் சர்மாவின் அபார ஆட்டத்தால் 15.2 ஓவரில், ஒரு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் அரை சதமடித்து அசத்தினர். 

3,038 ரன்கள் :

இந்தப் போட்டியில், ரோகித் சர்மா 37 பந்துகளில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 108 போட்டிகளில் விளையாடி 3,038 ரன்களை எடுத்துள்ளார். 

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இந்தப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 3,115 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
*

Share this story