ரோகித்-டிராவிட் புதிய கூட்டணியின் கலக்கல் வெற்றி : பவுலர்களுக்கு பாராட்டு மழை..

Rohit-Dravid new alliance's mixed victory Praise for bowlers ..

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில், இந்தியா அசத்தலான வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம், ரோகித் சர்மா-ராகுல் டிராவிட் புதிய கூட்டணி, முதல் 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது.

பாராட்டு :

போட்டிக்கு பிறகு, பேசிய கேப்டன் ரோகித்சர்மா சுழற்பந்து வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது :

இந்த தொடரில், சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அக்சர் படேல், ஹர்சல் படேல் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, வந்த சாஹலும் நன்றாக வீசினார்.

வெங்கடேஷ்க்கு பந்து வீசும் திறமை இருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி வரும் காலங்களில், அவரது பந்து வீச்சை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

வெற்றியுடன் தொடரை தொடங்கி இருப்பது முக்கியமானது. எல்லாமே மனநிலையை பொருத்துதான் இருக்கிறது. பனித்துளி விழும் முன்பே பந்து பேட்ஸ்மேனை நோக்கி நன்றாக எழும்பி வந்தது. 

பலமாக இருக்கிறது :

நடுவரிசை பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை. ஆனால், கடந்த 2 போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலம் பெற்று இருக்கிறது. ஹர்சல் படேல் 8-வதாக வந்தாலும் பேட்டிங் செய்கிறார். அவர் அரியானா அணிக்கு தொடக்க வீரராக ஆடியவர். 

தீபக் சாஹல் பேட்டிங்கை இலங்கை தொடரில் பார்த்தோம். அவரும் சிறப்பாக ஆடினார். சாஹல் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக் கூடியவர்.
*

Share this story