வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ரோகித், பாண்ட்யா, ஜடேஜா அதிரடி வருகை..

By 
Rohit, Pandya, Jadeja in action in West Indies series ..

இந்திய அணி, அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. 

ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9, 11 ஆகிய தேதிகளில் அகமதாபாத்திலும், 20 ஓவர் ஆட்டங்கள் பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

ரோகித் சர்மா :

இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுகிறார். 

காயத்தில் இருந்த அவர் உடல் தகுதி பெற்றுவிட்டார். ரோகித் சர்மா உண்மையில் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டார். 

விரைவில், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தனது உடல் தகுதியை நிரூபிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாண்ட்யா-ஜடேஜா :

முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான பும்ராவுக்கு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. 

ஆல்- ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இருவரும் உடல் தகுதியுடன் இருந்தால், அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அடுத்த சில தினங்களில் அறிவிப்பு வெளியாகிறது.
*

Share this story