விராட் கோலியை, பின்னுக்கு தள்ளினார் ரோகித் சர்மா : ஐசிசி ரேங்க் அறிவிப்பு

By 
Rohit Sharma overtakes Virat Kohli ICC rank announcement

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 

முதலிடம் :

போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளில் மூன்று சதங்கள் விளாசியுள்ளார்.

இதன்மூலம், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில், முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

முதல் இடத்தில் இருந்த கேன் வில்லியம்சன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும், மார்னஸ் லாபஸ்சேன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

5-வது இடம் :

ரோகித் சர்மா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய நிலையில், விராட் கோலி 6-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பாபர் அசாம், டேவிட் வார்னர், டி காக், ஹென்றி நிக்கோலஸ் முறையே 7 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பின், விராட் கோலி முதல் ஐந்து இடங்களுக்கு கீழ் சரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story