உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இருந்து, ரோகித் சர்மா விலகல்.. 

By 
roh8

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை தொடங்குகிறது. இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

ஐ.சி.சி. கோப்பையை கைப்பற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலண்ட் ஆடும் லெவனில் இருப்பார் என அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்காட் போலண்ட் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 
 

Share this story