யூரோ கோப்பையில், ரொனால்டோ நிகழ்த்திய புதிய சாதனை..

By 
Ronaldo sets new record in Euro Cup

யூரோ கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார் ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில், ஹங்கேரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வென்றது.

புடாபெஸ்ட் நகரில் நேற்று அரங்கேறிய எப் பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் கோதாவில் குதித்தன. இதில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை பதம் பார்த்தது.

இந்த போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்தார். இதன்மூலம் 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

இதற்கு முன் பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. 

அத்துடன் தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில், கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

மேலும், போர்ச்சுகல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story