சச்சின், கவாஸ்கர் சாதனையை முறியடித்தார் ஜோரூட் : எப்டி தெரிமா?

Sachin, Gavaskar break record Jorut How do you know

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 

அடிலெய்டில் நடைபெற்று வரும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 89 ரன்கள் சேர்த்தார். 

இதன்மூலம், இந்த வருடத்தில் மட்டும் 1,600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

இதன்மூலம், ஒரே வருடத்தில் 1,600 ரன்களை கடந்து சச்சின் தெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், கவாஸ்கர் சாதனையை முறியடித்துள்ளார். 

அதிக ரன்கள் :

மேலும், ஒரே வருடத்தில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

முகமது யூசுப் :

ஜோ ரூட்டை விட பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் 2006-ல் 1788 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 1976-ல் 1710 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். 

தென்ஆப்பிரிக்கா அணி முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 2008-ல் 1656 ரன்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். 

தற்போது, ஜோ ரூட் 4-வது இடத்தில் உள்ளார். அவர்  தற்போது 1606 ரன்கள் அடித்துள்ளார்.

மைக்கேல் கிளார்ச் 1595 ரன்களும், சச்சின் தெண்டுல்கர் 1562 ரன்களும், கவாஸ்கர் 1555 ரன்களும், பாண்டிங் 1503 ரன்களும் அடித்துள்ளனர்.
*

Share this story