இரண்டாவது பட தயாரிப்பிற்கு ரெடியான சாக்சி டோனி தயார்..

By 
sak2

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்சி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருந்தார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த இப்படம் ஜூன் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், தயாரிப்பாளர் சாக்சி  டோனி தன் அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாகவும் தனது இரண்டாவது படைப்பை தரமானதாக உருவாக்கும் ஆர்வத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

Share this story