சென்னை அணியில், சாம் கர்ரன் விலகல் : மாற்று வீரர் சேர்ப்பு

Sam Curran resigns from Chennai team

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் விலகியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான சாம் கர்ரனுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கர்ரன் விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சாம் கர்ரனுக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி, சாம் கர்ரனுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் டொமினிக் டிரெக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆல்-ரவுண்டரான டொமினிக் டிரெக்ஸ் கரீபியன் பிரிமியன் பிரிமியம் லீக்கில் விளையாடியுள்ளார். இவர் மும்பை அணியின் 'நெக் பவுலர்’-ஆக செயல்பட்டு வந்தார். 

தற்போது, அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Share this story