சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் செம பவுலிங் : வீழ்ந்தது திண்டுக்கல்..விவரம்..

By 
Chepauk Super Gillies bowler bowls Dindigul falls..details

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நடைபெற்ற ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 24 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது.

செம பவுலிங் :

முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. 

கேப்டன் கவுசிக் காந்தி 31 பந்தில் 45 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெகதீசன் 27 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி ) எடுத்தனர்.

பின்னர், விளையாடிய திண்டுக்கல் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்கமுடிந்தது. கேப்டன் ஹரி நிஷாந்த் அதிகபட்சமாக 39 ரன் எடுத்தார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றிக்கு சாய்கிஷோரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. 

தனி முத்திரை :

இலங்கை சுற்றுப்பயணத்தில், இந்திய அணிக்கு வலைப்பயிற்சி பவுலராக சென்று நாடு திரும்பிய அவர் தனது முதல் ஆட்டத்தில், 30 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி, தனி முத்திரை பதித்தார். இது தொடர்பாக சாய் கிஷோர் கூறியதாவது :

எனது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இன்னும் இதை விட சிறப்பாக பந்து வீச வேண்டும் என்று தோன்றுகிறது. 

எந்தவித நெருக்கடியிலும், எனது திறமையை வெளிப்படுத்த முடியும். இந்த ஆடுகளம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன்' என்றார்.

Share this story