சானியா மிர்சா குறித்த தகவலை நீக்கினார் சோயிப் மாலிக்; காரணம்..?

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் இருவரும் விவாகரத்து கோர இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு சோயிப் மாலிக் மறுப்பு தெரிவித்திருந்தார். பிறகு இருவரும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த நிலையில் மீண்டும் இருவர் குறித்த விவாகரத்து வதந்தி மீண்டும் எழுந்துள்ளது. இந்த வதந்திக்கு மாலிக்கின் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா குறித்த தகவல்களை மாலிக் நீக்கியுள்ளார்.
அதாவது மிகச்சிறந்த பெண்மணியான சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கியுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.