கேப்டன் பதவியில் இருந்து, கோலி விலக வேண்டுமா? : ஷேவாக் கருத்து

Should the goalie resign from the captaincy  Sehwag commented


20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றதால், விராட் கோலியின் கேப்டன் பதவி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

பல வெற்றிகள் :

இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :

ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இது அவரது முடிவை பொறுத்தது. அணியில் ஒரு வீரராக விளையாட கோலி விரும்பினாலும், அது அவரின் முடிவுதான்.

விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி, பல வெற்றிகளை பெற்றுள்ளது. 

கேப்டன் பதவியில் அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர். ஆக்ரோ‌ஷமாக இருந்து அணியை வழி நடத்தினார்.

சுயபரிசோதனை :

ஐ.சி.சி. போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்தும், அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் இருந்தது குறித்தும் இந்திய அணி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்திய அணி கடைசியாக 2013 ஐ.சி.சி. போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது. அதன்பின், 8 ஆண்டுகளாக எதையும் வெல்லவில்லை. இதுகுறித்து நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும்.

இரு நாடுகளிடையே போட்டிகளில் வென்றாலும், உலக அளவிலான போட்டியை வெல்லும்போதுதான் மக்கள் நினைவு வைத்திருப்பார்கள். 

அதே நேரத்தில், கடினமான இந்த கால கட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்' என்றார்.
*

Share this story