'வாத்தி கம்மிங்' பாட்டுக்கு ஆட்டம் போட்ட ஷ்ரேயாஸ் : வைரலான 'ரிலாக்ஸ்' பதிவு

By 
Shreyas who danced to the song 'Vathi Kumming' Viral 'Relax' recording

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஷ்ரேயாஸ், மாஸ்டர் படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற அக்டோபர் 17 முதல்  நவம்பர் 14-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. 

மாற்று வீரர் :

இந்த  தொடரில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டன.

கடந்த 8-ந்தேதி இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 

இதில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாசுக்கு இடம் கிடைக்கவில்லை. மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார்.

இதற்கிடையே ஐ.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. 

ரிலாக்ஸ் :

இதற்காக, டெல்லி கேப்பிடல்ஸ் அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.  

தீவிர பயிற்சிக்கிடையே ஷ்ரேயாஸ் சக வீரர்களுடன் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வரும் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடி ரிலாக்ஸ் செய்தார். இந்த வீடியோ   வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
*

Share this story