விராட் கோலி சொன்னதை நிரூபித்து காட்டிய ஸ்மித்..

 

By 
smit

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஸ்மித் சதம் விளாசினார். இது அவரின் 31-வது சதம் ஆகும்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ஸ்மித் குறித்து விராட் கோலி கூறியதாவது:-

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று வரும்போது, இந்த தலைமுறையில் ஸ்மித் சிறந்த வீரர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்தவொரு வீரரும் அவரை நெருங்க முடியும் என நான் நினைக்கவில்லை. அவருடைய திறமை, போட்டிக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்வது, சூழ்நிலைக்கு ஏற்றபடி விளையாடுவதில் அவருக்கு இணை எவரும் இல்லை.

அவருடைய சாதனை அவரைப் பற்றி பேசும். 85 முதல் 90 போட்டிகளில் விளையாடி 60-க்கு மேல் சராசரி வைத்திருப்பது நம்ப முடியாதது. இவ்வாறு விராட்  கோலி குறிப்பிட்டிருந்தார். விராட் கோலி கூறியதுபோல் சிறந்த வீரர் என்பதை ஸ்மித் நிரூபித்து விட்டார்.

ஆஸ்திரேலியா 76 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஸ்மித் 4-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சதம் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 285 ரன்கள் குவித்தது. ஸ்மித் 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.

469 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆன நிலையில், இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி 14 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். நேற்றை 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் உள்ளது.

Share this story