சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

Sometimes, this is the problem Rohit Sharma

டி20 உலகக்கோப்பை தொடரில்,  நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

இப்போட்டியில், ஆப்கானிஸ்தானை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. 

இதன்மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

ஆப்கானிஸ்தானுடன் வெற்றி பெற்றபோதும் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால், அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா கிட்டத்தட்ட இழந்துவிட்டது. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், சிறப்பாக ஆடிய இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கூறியதாவது :

இப்போட்டியில் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. 

இதே அணுகுமுறை, முதல் இரு போட்டிகளிலும் நடந்திருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை. ஆனால், நீண்டகால தொடரில் இருக்கும்போது இது நிகழலாம். 

முடிவெடுப்பது சில நேரங்களில் பிரச்சினையாக இருக்கலாம். அதுதான், கடந்த இரண்டு போட்டிகளிலும் (பாகிஸ்தான், நியூசிலாந்து) நடந்துள்ளது’

Share this story