பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய  மாணவர்கள் கைது : அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை

Students arrested for celebrating Pakistan victory Parents demand government

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.

பாகிஸ்தானின் வெற்றியை உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் என்ஜினீயிரிங் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் கொண்டாடினார்கள். 

தேசத்துரோக வழக்கு :

பாகிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக, தங்களது வாட்ஸ்-அப் செயலியில் இருந்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதான சவுகத் அகமது, அர்‌ஷத் யூசுப், இனாயத் அல்தாப் ஆகிய 3 மாணவர்கள் மீதும், தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 3 காஷ்மீர் மாணவர்களையும் விடுதலை செய்யுமாறு, அவர்களது குடும்பத்தினர் உத்தரபிரதேச மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னிப்பு :

இதுகுறித்து, 3 மாணவர்களின் பெற்றோர்கள், 'எங்களது பிள்ளைகள் கைது செய்யப்பட்டு, ஆக்ரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. 

எங்களது பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்து இருந்தால், அவர்களது சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால், அவர்களது எதிர்காலம் பாழாகிவிடும் என்று உத்தரபிரதேச அரசை கேட்டுக் கொள்கிறோம்' என்றனர்.
*

Share this story