நேற்று சுமித் நாகல், இன்று பி.வி்.சிந்து அதிரடி ஆடுகளம்..
 

By 
Sumit Nagal yesterday, PV Sindhu Action Stadium today ..

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவும், இஸ்ரேல் வீராங்கனை செனியா பெர்லிகர்போவா ஆகியோர் இன்று காலை மோதினர்.

இதில், பி.வி.சிந்து அதிரடியாக ஆடி 21-7,  21- 10 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் இந்திய வீரர் சுமித் நாகல் :

முன்னதாக நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சுமித் நாகல் (வயது 23) உஸ்பெகிஸ்தானின் டென்னிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார். இதில், இஸ்டோமினை 6-4, 6-7 (6), 6-4 என்ற செட் கணக்கில் சுமித் வீழ்த்தினார். 

இதன்மூலம், 1996-க்குப் பிறகு ஒலிம்பிக்கில் ஒற்றையர் போட்டியில் வென்ற முதல் இந்திய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.

இந்த வெற்றியை பெற அவருக்கு இரண்டு மணி நேரம் 34 நிமிடங்கள் ஆனது. சற்று நீளமான போட்டி தான் என்றாலும், எதிரணி வீரர் கடும் சவால் அளித்தார். 

எனினும், இறுதியில் சுமித் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Share this story