வாள் வீச்சில், தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு வந்த அதிர்ச்சி
 

Sword throw, shock to Tamil Nadu player Bhavani Devi'


டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இன்று காலை வாள்வீச்சுக்கான முதல் சுற்றுப்போட்டி நடைபெற்றது. 

இதில், பெண்களுக்கான தனிநபர் சப்ரே முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நடியாவை எதிர்கொண்டார். 

இதில், பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இரண்டாவது சுற்றில், பிரான்ஸை சேர்ந்த மனோனுடன் போட்டியிட்டதில், 7-15 என்ற கணக்ககில் தோல்வியடைந்தார்.

* டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி போர்ச்சுக்கலின் ஃபு யு-வை எதிர்கொண்டார்.

போர்ச்சுக்கல் வீராங்கனையின் வேகத்திற்கு சுதிர்தா முகர்ஜியால் ஈடுகொடுக்க முடியவில்லை. 

தொடர்ந்து, நான்கு கேம்-களையும் 3-11, 3-11, 5-11, 5-11 (0-4) என இழந்து வெளியேறினார்.

Share this story