'தல' டோனின்னா சிங்கம்னு அர்த்தம் : தனுஷ்-லோகேஷ் கனகராஜ் பாராட்டு

By 
'Tala' means Toninna Singamnu Dhanush-Lokesh Kanagaraj praise

டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில், மிகச் சிறப்பான பேட்டிங் மூலம், சென்னை அணியை வெற்றி பெறச் செய்தார் கேப்டன் எம்.எஸ். டோனி.

இதற்கு டோனியை, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளனர்.

ஐபிஎல் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்கள் சேர்த்தது.

சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி, சென்னையின் வெற்றியை உறுதி செய்தார்.

இதையடுத்து, சமூக ஊடகங்களில் பாராட்டு வெள்ளத்தில் நனையத் தொடங்கினார் டோனி. 

இதன்மூலம், 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் " 7 அவ்வளவு தான், அதுதான் டுவிட் என டோனியின் ஜெர்ஸி எண்ணை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 
 
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு முறை சிங்கம் எப்போதுமே சிங்கம் என டோனியின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

Share this story