நடிகர் யோகிபாபுவுக்கு, பேட்டை பரிசளித்த 'தல' டோனி : வைரல் நிகழ்வு..

By 
yogi44

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு தன்னுடைய பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்த பேட்டை வாங்கிய நடிகர் யோகிபாபு அந்த பேட்டிற்கு முத்தம் கொடுத்து கேப்டன் டோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'நன்றி டோனி சார்' என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. சில படங்களில் கதாநாயகனாக கூட நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

Share this story