தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மீது வலைத்தளத்தில் தொடர் தாக்குதல்; யார் காரணம்?

By 
aswin

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மீது தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் வைக்கப்படுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் யாருமே செய்ய முடியாத பல சாதனைகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் முறியடித்திருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களான ஹர்பஜன்சிங் கபில்தேவ் ஆகியோர்களின் ரெக்கார்டுகளை முறியடித்துள்ள அஸ்வின் தற்போது 500 விக்கெட்டுகளை வீழ்த்தும் சாதனையை படைக்கப் போகிறார். தற்போது கும்ப்ளேவுக்கு அடுத்த வீரராக அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் இருக்கிறார். 

இந்த நிலையில் அஸ்வின் தற்போது உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்திருக்கிறார். கடைசியாக ஐந்து ஆண்டுகளில் அஸ்வின் வெறும் ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடி இருப்பார். அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது சிலருக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. 

அக்சர் பட்டேல் பெயரில் அஸ்வினை விமர்சித்து ஒரு ட்விட் வெளியானது. ஆனால் அது போலியானது என்று பின்னர் தெரிய வந்தது. தமிழக கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அஸ்வினை தொடர்ந்து விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு வருகிறது.

ஆனால் இது உண்மையான பதிவா இல்லை யாரேனும் சிவராமகிருஷ்ணன் ட்விட்டர் பக்கத்தில் ஊடுருவி இவ்வாறு செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவராமகிருஷ்ணன் தமிழர் என்பதால் அவர் இந்த அளவுக்கு அஸ்வினை விமர்சித்து போட்டு இருக்க வாய்ப்பு இல்லை.

இதனால் அஸ்வினை பிடிக்காத சிலர் அவருடைய நம்பிக்கையை குலைக்கும் விதமாக இவ்வாறு பிரபலங்களின் ட்விட்டர் கணக்கை ஊடுருவி இவ்வாறு ட்விட் போடுவதும் சிலர் பிரபலங்களின் பெயரில் போலி கணக்கை தொடங்கி அஸ்வினை விமர்சிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இதற்கெல்லாம் அஸ்வின் உலகக்கோப்பை தொடரில் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

Share this story