'டென்னிஸ் சூறாவளி' சானியா மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் பறித்தது.!

'Tennis hurricane' Sania Mirza pair clinched the title.!

ஆஸ்ட்ராவா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி செக்குடியரசில் நடந்தது. 

இதில் நடந்த பெண்கள் இரட்டையர் இறுதிஆட்டத்தில், சானியா மிர்சா (இந்தியா)-சூவாய் ஜாங் (சீனா) ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கைட்லின் கிறிஸ்டியன் (அமெரிக்கா)-எரின் ரோட்லைப் (நியூசிலாந்து) இணையை 64 நிமிடங்களில் தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 

மகுடம் சூடிய சானியா ஜோடிக்கு ரூ.18½ லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்த ஆண்டில் சானியா வென்ற முதல் பட்டம் இதுவாகும். 

மொத்தத்தில், அவரது 43-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

* ரஷ்யாவில் நடந்த பார்முலா-1 கார் பந்தயத்தில் மெர்சிடஸ் அணியின் வீரர் லூயில் ஹாமில்டன், தனது 100-வது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தார். 

மேலும், பார்முலா-1 கார் பந்தயத்தில் நூறு கிராண்ட் பிரிக்ஸ் தொடர்களை வென்ற ஒரே வீரர் என்ற சிறப்பை தன் வசமாக்கியுள்ளார். 

7 முறை பார்முலா-1 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த ஹாமில்டன், ரஷ்யாவில் மழைக்கு இடையே நடந்த தொடரில் வென்றதன் மூலம் இந்த சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பார்முலா-1 பந்தயத்தின் இரண்டாவது இடத்தை ரெட் புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனும், மூன்றாவது இடத்தை பெராரி அணியின் வீரர் கார்லோஸ் சயின்சும் தக்க வைத்தனர்.
*

Share this story