'டென்னிஸ் டெரர்' பாலா படோசா.. செம உற்சாகம்..ஏன்னா..
 

'Tennis Terror' Bala Badosa .. Excitement .. Why ..

‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதிச் சுற்று என்று அழைக்கப்படும், உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது. 

8 வீராங்கனைகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றில் மோதுகிறார்கள். லீக் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

இந்நிலையில், நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட்டில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தி, 2-வது வெற்றியுடன் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
*

Share this story