'தல 'டோனியை சந்தித்த தளபதி விஜய்: வைரலாகும் நிகழ்வு..

By 
vijay101

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

இருந்தபோதிலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவதுடன் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், முன்னாள் கேப்டன் டோனி  சினிமாவில் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்து, சமீபத்தில் எல்.ஜி,எம் என்ற படத்தை தயாரித்திருந்தார். எனவே, தமிழ் நடிகர்களுடனும் அவர்  நெருங்கிப் பழகி வரும் நிலையில், தளபதி விஜய்யை அவர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இருவரும் நாற்காலியில் அருகருகே அமர்ந்து பேசும் புகைப்படத்தை டோனி பகிர்ந்து,  'நண்பா' என்று   குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. இது வைரலாகி வருகிறது.

Share this story