பத்திரிகையாளருக்கு  நன்றி தெரிவித்தார், கோலியின் காதல் மனைவி அனுஷ்கா

Thanks to the press, Koli’s romantic wife Anushka

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. 

இதைத் தொடர்ந்து, இருவரும் தங்களது மகளின் முகத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமலேயே ரகசியம் காத்து வருகின்றனர்.

சுற்றுப்பயணம் :

இந்நிலையில், கடந்த வாரம் விராட் கோலி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்காக மும்பை விமான நிலையம் சென்றிருந்தபோது தனது மகள் வாமிகா, மனைவி அனுஷ்கா சர்மா இருவரையும் அழைத்துச் சென்றார். 

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், விராட்கோலி மகளின் முகத்தை புகைப்படம் பிடித்துவிட்டார். ஆனாலும், அந்த புகைப்படம் எந்த பத்திரிக்கையிலும் வெளியாகவில்லை. 

நன்றி :

இந்நிலையில், அந்த பத்திரிக்கையாளருக்கு அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

என் மகளின் புகைப்படம், வீடியோ எதையும் வெளியிடாத அந்த பத்திரிக்கையாளருக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. 

எங்கள் மகளை விளம்பர வெளிச்சம் இல்லாமல் வளர்க்க நினைக்கிறோம். 

அவர் வளர்ந்த பிறகு தன் விருப்பத்தை அவரே தேர்ந்தெடுக்கட்டும். அதுவரை, எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' என்றார்.

Share this story