போட்டிக்கு முன், ரஹானேவிடம் கூறிய அந்த ஒரு வார்த்தை : டோனி ஓபன் டாக்

By 
cskdhoni2

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய சென்னை அணி 18. 2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட், சான்ட்னர், துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார். 

மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:- சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். மஹாலா மற்றும் பிரிட்டோரியஸின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.

துஷார் தேஷ்பாண்டே மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொடர்ச்சியாக அவரிடம் பேசி வருகிறோம். அறிவுரைகளை உள்வாங்கி நேர்த்தியாக செயல்படுகிறார்.

ரஹானே முதல் 2 போட்டிகளில் துஷார் தேஷ்பாண்டே நோ-பால்களை வீசினார், ஆனால் தற்போது அவர் முன்னேறி வருகிறார் என நம்புகிறேன். ரோகித் விக்கெட்டை வீழ்த்திய பந்து மிகவும் சிறப்பானது. துஷார் தேஷ்பாண்டேவிற்கு அதிக திறமை உள்ளது. 

நோ-பால் வீசுவதை தவிர்த்தால், அவரது திறமை மேலும் மேம்படும். போட்டிக்கு முன் ரஹானேவிடம் ஒரே வார்த்தை தான் கூறினேன். எந்த அழுத்தமும் இல்லாமல் ஜாலியாக விளையாடும்படி கூறியதாக டோனி கூறினார்.

Share this story