உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; இடம் பெறும் வீரர்கள்..

By 
wc111

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5-ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறவில்லை. துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி:- 1. ரோகித் சர்மா 2. சுப்மன் கில் 3. விராட் கோலி 4. ஸ்ரேயாஸ் அய்யர் 5. ஹர்திக் பாண்ட்யா 6. ஜடேஜா 7.கே.எல்.ராகுல் 8. குல்தீப் யாதவ் 9. முகமது சமி 10. முகமது சிராஜ் 11. பும்ரா 12. ஷர்துல் தாகூர் 13. சூர்யகுமார் யாதவ் 14. இஷான் கிஷன் 15. அக்சர் படேல் உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அறிவித்துள்ளன.
 

Share this story