இந்திய அணி எதார்த்தமாக இருக்க வேண்டும் : வெற்றிக்குப் பின், டிராவிட் பேச்சு

The Indian team must be realistic After the win, Dravid talks

ரசிகர்களால் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, கடைசி 20 ஒவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. 

இதன்படி, டி 20 தொடரை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.

எதார்த்தமாக இருக்கிறோம் :

போட்டியின் வெற்றிக்கு பின்னர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது :

இது ஒரு நல்ல தொடர் வெற்றி. தொடரில் அனைவரும் நன்றாக விளையாடினர். நன்றாகத் தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், நாங்களும் மிகவும் எதார்த்தமாக இருக்கிறோம். 

உண்மையைச் சொல்வதென்றால், நாம் நம் கால்களை தரையில் வைத்துக்கொண்டு, சற்று எதார்த்தமாக இருக்க வேண்டும். 

உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் மூன்று நாட்களுக்குப் பிறகு விளையாடுவதும், ஆறு நாட்களில் மூன்று ஆட்டங்களில் விளையாடுவதும் நியூசிலாந்து அணிக்கு எளிதாக இருக்கவில்லை. 

பாடம் கற்க :

இந்திய இளம் வீரர்களின் செயல்பாடுகள் அணிக்கு சாதகமாக உள்ளது. இந்தத் தொடரில் இருந்து, பாடம் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். அடுத்த 10 மாதங்களில் இது ஒரு நீண்ட பயணமாகும்.

மேலும், எங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் இருக்கும். சில இளைஞர்கள் முன்னேறி வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

கடந்த சில மாதங்களாக அதிக அளவில் கிரிக்கெட் விளையாடாத சில வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்பளித்துள்ளோம், மேலும் சில அனுபவமிக்க வீரர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டனர். 

நாங்கள் எங்களிடம் உள்ள சில திறன்களைப் பார்த்தோம், நாங்கள் முன்னேறும்போது அந்த திறன்களையும் வளர்த்துக்கொள்வோம்' என்றார்.
*

Share this story