இதுதான் எனது கடைசி டி20 உலகக்கோப்பை – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்..

By 
hentry

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடரானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இடம் பெற்ற 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிந்து விளையாடி வருகின்றன.

இதில் குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வி அடைந்து சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

கடைசியாக நாளை நடைபெறும் போட்டியில் பப்புவா நியூ கினி அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் தான் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் டிரெண்ட் போல்ட் முக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, நியூசி அணிக்காக விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை இது தான் என்று நினைக்கிறேன்.

நானும், டிம் சவுதியும் இணைந்து அதிக ஓவர்கள் வீசியிருக்கிறோம். பவுலிங்கில் மட்டுமின்றி வெளியிலும் சவுதி தான் தனக்கு சிறந்த நண்பர். இன்னும் சில போட்டிகளில் பவுலிங் செய்வேன் என்று நினைக்கிறேன். ஏற்கனவே நியூசிலாந்து அணியின் சென்ட்ரல் ஒப்பந்தத்தை நிராகரித்த போல்ட், தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறார்.

இதன் காரணமாக டி20 கிரிக்கெட்டிலிருந்து டிரெண்ட் போல்ட் தனது ஓய்வு முடிவு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து விளையாடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து பரிதாபமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

Share this story