டிஎன்பிஎல் கிரிக்கெட் : மதுரை பாந்தர்ஸ் அபார பாய்ச்சல்; சேலம் அணியை 98 ரன்களில் கட்டுப்படுத்தியது..

By 
panth

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் சேலம் ஸ்பர்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே மதுரை அணி துல்லியமாக பந்து வீசியது. இதனால் சீரான இடைவெளியில் சேலம் அணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் தன்வார் 29 ரன்களை எடுத்தார். அமித் சாத்விக், கௌரிசங்கர் தலா 17 ரன்கள் எடுத்தனர். மதுரை சார்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டும், முருகன் அஷ்வின், கவுதம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Share this story