டிஎன்பிஎல் கிரிக்கெட் : மதுரை - திருச்சி அணிகள் இன்று மோதல்..

By 
tnpl99

* 8 அணிகள் பங்கேற்கும் 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்க உள்ளது. மதுரை அணி 4 போட்டியில் 2 வெற்றி பெற்றுள்ளது. திருச்சி அணி 4 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.

* தென் கொரியாவின் பூசன் நகரில் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் இன்று விளையாடின.

இந்த போட்டியில் ஈரானை 33-28 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. இந்தியா போட்டி தொடக்கத்தில் இருந்து, ஜப்பான், கொரியா மற்றும் சீன தைபே ஆகிய அணிகளை அடுத்தடுத்து வரிசையாக வீழ்த்தி இருந்தது.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி ஹாங்காங் அணிக்கு எதிராக நாளை இறுதி லீக் போட்டியில் விளையாடி விட்டு, பின்னர் அந்த அணிக்கு எதிராக அதே நாளில் இறுதி போட்டியில் விளையாட உள்ளது.
 

Share this story