டிஎன்பிஎல் : வீரர்கள் ஏலம் நிறைவு; முழு விவரம்..

tnpl

டிஎன்பிஎல் போட்டியில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

அதில் ஒரு வீரர், ஏ அல்லது பி பிரிவில் இருந்து மற்றும் மற்றொரு வீரர் சி அல்லது டி பிரிவில் இருந்து. இந்நிலையில் இன்று 12 மணிக்கு வீரர்கள் ஏலம் தொடங்கப்பட்டது. முதல் வீரராக அறிவிக்கப்பட்ட விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் ஏலம் எடுத்தது.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது.

கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. ஏ பிரிவில் கடைசி வீரரான சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது. 

Share this story