இன்றைய கிரிக்கெட் பரபரப்பு... இந்திய அணி ‘சூப்பர் 8’ சுற்றில் விளையாடுமா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. 

By 
dube1

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மூன்று இன்னிங்ஸ் ஆடி 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷிவம் துபே. இந்நிலையில், வரும் போட்டியில் கோலி ரன் குவிப்பார் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்து வருகிறார் விராட் கோலி. உலகக் கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள அவர், முறையே 1, 4 மற்றும் 0 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் 741 ரன்களை குவித்திருந்தார். அப்படி இருக்கும் நிலையில் அவரா இது என்ற கேள்வி அவரது ஆட்டத்தை பார்க்கும் போது எழவே செய்கிறது.

“கோலி குறித்து பேச நான் யார்? அவர் முதல் மூன்று போட்டிகளில் ரன் எடுக்கவில்லை. அடுத்து வரும் மூன்று போட்டிகளில் அவர் மூன்று சதங்கள் விளாசலாம். அப்போது இந்த விவாதங்கள் எழாது” என துபே தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) இந்தியா மற்றும் கனடா அணிகள் ‘குரூப் - ஏ’ சுற்றுப் போட்டியில் விளையாடுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்றால் முதல் சுற்றில் விளையாடிய அனைத்து அணிகளுடனும் வெற்றி பெற்ற அணியாக ‘சூப்பர் 8’ சுற்றில் விளையாடும்.

 

Share this story