இன்றைய ஆடுகளம் : வழிகாட்டியாய் டோனி

By 
Today's pitch Tony as the guide

இந்திய அணிக்கு 2 உலக கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர் மகேந்திரசிங் டோனி.

அவரது தலைமையிலான இந்திய அணி 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் கைப்பற்றியது. 

அதோடு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் பெற்றுக்கொடுத்தார்.

4-வது கோப்பை :

சர்வதேச போட்டியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெறுவதாக அறிவித்த டோனி தற்போது, ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். 

சமீபத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்தார்.

இதற்கிடையே, ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக 40 வயதான டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.

டோனியின் அறிவுரை, தந்திரமான முடிவு இந்திய அணிக்கு தேவைப்படுவதால் அவரை கிரிக்கெட் வாரியம் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து உள்ளது. அதன்படி, அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழிகாட்டியாய் டோனி :

இந்நிலையில், டோனி இந்திய அணியோடு இணைந்துகொண்டார். ஐ.பி.எல். போட்டியை முடித்த பிறகு அவர் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கி இருந்தார். 

20 ஓவர் உலக கோப்பை போட்டி அங்கு நடைபெறுவதால் அவர் இந்திய அணியோடு சேர்ந்துகொண்டார். 

பயிற்சியின்போது, டோனியின் ஆலோசனை, இந்திய வீரர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது சுற்றில் நேரடியாக விளையாடும் இந்திய அணி குரூப் 2 பிரிவில் உள்ளது.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 24-ந்தேதி எதிர்கொள்கிறது. 

நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும், தகுதி சுற்று அணிகளுடன் 5 மற்றும் 8-ந் தேதிகளிலும் விளையாடுகிறது.

20 ஓவர் உலககோப்பை போட்டிக்கு முன் இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்திய அணி இங்கிலாந்துடன் மோதும் முதல் பயிற்சி ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.

Share this story